Annapoorani: அருள்வாக்கு அன்னபூரணி வடித்த 2வது கணவர் அரசின் சிலை.. உடைத்து தூக்கிச்சென்ற 3வது கணவர்..

Published : Dec 28, 2021, 02:18 PM IST
Annapoorani: அருள்வாக்கு அன்னபூரணி வடித்த 2வது கணவர் அரசின் சிலை.. உடைத்து தூக்கிச்சென்ற 3வது கணவர்..

சுருக்கம்

2019ம் ஆண்டு அரசு இறந்து விட்டதால் அவரது சக்தி முழுவதும் இந்த சிலை வடிவில் தனக்கே முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதால் இந்த சிலையை இங்கே அன்னபூரணி வடித்துள்ளார்.

மதுராந்தகம் அருகே தாதங்குப்பத்தில் அன்னபூரணி அரசு அம்மாவின் கணவர் சிலையை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டு வருபவர் ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி. அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார் அன்னபூரணி. அந்த வீடியோவில் பொதுமக்கள் பக்தி பரவசத்தால் கத்திக்கொண்டும் பூஜை செய்வதையும் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 

இந்த சர்ச்சைகளுக்கு பின்னர் அன்னப்பூரணி முதன்முறையாக பேட்டி ஒன்றில் பங்கேற்று இருக்கிறார்.  அதில் பேசியுள்ள அவர் , தான் ஒரு சக்தி என்றும் இந்த உலகை இயக்கும் சக்தி தனக்குள் இருக்கு என்றும் கூறியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் ஓடி ஒளிந்து விட்டதாக வதந்தி பரவுகிறது. அதனால் நேரடியாக வந்திருக்கிறேன். நான் இதுவரை என்னை சாமி என்றோ ஆதிபராசக்தி என்று கூறவில்லை. யாரிடமும் என்னை நம்புங்கள், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் பேசவில்லை. 

என்னை பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு உணர்வு ஏற்படுகிறது. அது ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படுகிற ஒரு உணர்வு. அப்படித்தான் மக்கள் என்னை நாடி வருகின்றனர். ஆனால் அந்த உணர்வை பலர் கொச்சைப் படுத்துகின்றனர். நானும் அரசுவும் இணைந்ததே இந்த நோக்கத்திற்காகத்தான். எங்கள் இருவருக்குள்ளும் ஒரே சக்தி தான் இருந்திருக்கிறது. அது இப்போது தான் எங்களுக்கு தெரிகிறது. 

நாங்கள் விரும்பி வேறு காரணத்திற்காக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால் எங்கேயோ தலைமறைவாக இருந்து இருக்க முடியும். அந்த சக்தியின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதனால்தான் ஊடக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் தான் நீங்கள் எங்களை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் சக்தியை புரிந்து கொள்ளாமல் என்னை அவமானப்படுத்த முயற்சிக்கிறீர்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அருள்வாக்கு தரும் அன்னபூரணி அரசு அம்மா என திடீரென ஒரு பெண் பிரபலமானார். சமூகவலைதளங்களிலும் வைரலானார். இதையடுத்து இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 2013-ம் ஆண்டு ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்குகொண்டதும், இவர் வேறொரு பெண்ணின் கணவருடன் குடித்தனம் நடத்தி வந்ததும் தொடர்பான கிளிப்பிங் வெளியாகி அந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில் மதுராந்தகம் அருகே தாதங்குப்பத்தில் அன்னபூரணி ஆசை ஆசையாக தனது இரண்டாவது கணவருக்கு 2020ம் ஆண்டு சிலையை அமைத்து பூஜை செய்து வந்தார். சுமார் 50 செண்ட் நிலத்தில் ஒரு கட்டிடம் கட்டி அதில் அரசு சிலையை வைத்து பராமரித்து வந்தார். 2019ம் ஆண்டு அரசு இறந்து விட்டதால் அவரது சக்தி முழுவதும் இந்த சிலை வடிவில் தனக்கே முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதால் இந்த சிலையை இங்கே அன்னபூரணி வடித்துள்ளார்.

இந்த சிலை மார்பளவில் இருந்து 3 அடி உயரம் கொண்டது. கடந்த 20 நாட்களுக்கு முன் இந்த சிலை மாயமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த சிலையை மூன்றாவது கணவர் ரோஹித் 10 பேருடன் காரில் வந்து தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. அதாவது மஹாபலிபுரம் அருகே இந்த சிலையை வைத்து பாதுகாக்க இருப்பதாகவும், இங்கு வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளதாகவும் கூறி அந்த சிலையை எடுத்துச் சென்றுள்ளனர். 

ஆனால் அந்த சிலை மகாபலிபுரத்தில்தான் இருக்கிறதா என்பது பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அருள்வாக்கு அன்னபூரணி அரசும் இதுவரை எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. 
 

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!