ஆபாசத்தின் உச்சத்துக்கே போகும் ‘டிக்-டாக்’ ஆப்... பீச்சில் கும்மாங்குத்து போடும் 2 பெண் போலீஸ்... வேகமாக வைரலாக வீடியோ!!

By sathish kFirst Published Jul 13, 2019, 3:35 PM IST
Highlights

பீச்சில் இரண்டு போலீஸ் சீருடையில் கும்மாங்குத்து ஆட்டம் போடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.
 

பீச்சில் இரண்டு போலீஸ் சீருடையில் கும்மாங்குத்து ஆட்டம் போடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது.

முகம் தெரியாத ஒருவருடன் மோகத்தில் வழிந்து வழிந்து பேசுவதும், ரொமான்ஸ் பண்ணுவதும் என கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லாமல் கில்மா மேட்டருடன் பரவி வருகிறது ‘டிக்-டாக்’ ஆப். இந்த செயலியால் இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று  ‘டிக்-டாக்’ ஆப்க்கு ஆப்படித்தது கோர்ட்டு,  இது டிக்-டாக் பிரியர்களை வெகுவாக பாதித்தது. ஆனாலும் சிறிது நாட்களிலேயே சில நிபந்தனைகளுடன் டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் தலைதூக்கிய‘டிக்-டாக்’ செயலி ஆப்க்கு அடிமையாகி மாணவிகள், இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.ஆனால் போலீசாரையும் விடவில்லை இந்த மோசமான  ‘டிக்-டாக்’ ஆப். கடற்கரையில் துள்ளி வரும் அலையில் இரு இளம் பெண் போலீசார், உற்சாகமாக நடனமாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

‘சூர்யவம்சம்’ படத்தில் வரும் ‘சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு’ என்ற பாடல் வரிகள் ஓட, பின்னணியில் கடற்கரையில் நடன கலைஞர்களுக்கு சவால் விடும் வகையில் நளினமாக போலீஸ் சீருடையில் குத்தாட்டம் போட்டுள்ளனர் பெண் போலீசார். பெண் போலீசாரின் ஆட்டத்தில் ஆபாசம் இல்லை தான் ஆனாலும், போலீஸ் சீருடை அணிந்தபடி அவர்கள் குத்தாட்டம் போட்டிருப்பது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது எந்த கடற்கரை என்றும், இது ஆடியிருப்பது யார் என்றும் சரியாக தெரியவில்லை.

சமீபத்தில் போலீஸ் சீருடையில் ஆணும், பெண்ணும் ஆடி பாடுவது போன்ற வீடியோ வெளியானது. விசாரணையில், அவர்கள் நாடக நடிகர்கள் என்பது தெரியவந்தது. எனவே இந்த வீடியோவில் ஆடியிருப்பது நாடக நடிகர்களா இல்லை நிஜ போலீசா என்பது இன்னும் தெரியவில்லை?  ஆபாச இணையதளம் என்ற பெயர் மட்டும் தான் வைக்கவில்லை. ஆனால் சத்தமே இல்லாமல் சென்சார் செய்யப்படாமல் ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்றுகொண்டிருக்கிறது  ‘டிக்-டாக்’ ஆப்.  குறுகிய நேரத்தில் ஒருவரது தனித்திறமையை வெளிப்படுத்தும் மேடையாகவே பார்க்கப்பட்ட இந்த ‘டிக்-டாக்’ ஆப் தற்போது ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது.

click me!