மூன்று பெண்களை நிர்வாணமாக்கி அடித்த போலீஸ் அதிகாரிகள்... கர்ப்பமான தங்கையின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்ததால் கலைந்த கரு!!

By sathish kFirst Published Sep 18, 2019, 5:21 PM IST
Highlights

மூன்று பெண்களைக் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

மூன்று பெண்களைக் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தில் 2 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் தர்ராங் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள், கடத்தலில் ஈடுபட்டதாக சொல்லி கடந்த 8-ம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண்களில் ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். போலீசாரின் துன்புறுத்தலால், அவரது வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிட்டது. இந்த கொடூர சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின்பு தெரியவந்துள்ளது.

போலீஸ் ஸ்டேஷனில் நடந்த இந்த  சம்பவங்கள் குறித்துப் பேசிய ஒரு பெண் "செப்டம்பர் 8-ம் தேதி இரவு எங்கள் வீட்டிலிருந்தோம். அங்கு வந்த போலீஸ்காரர்கள் எங்களைக் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி கூறினர். நாங்கள் அவர்களை எதிர்த்துக் கேட்டதற்கு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். அவர்கள் துப்பாக்கியைக் காட்டியதும் நானும் என் கணவரும் பயந்துவிட்டோம். அவர்கள் நம்மைச் சுடப் போகிறார்கள் என என் கணவர் கூறினார்.

ஆனால், அப்படி எதுவும் நடக்காமல் என்னுடன் சேர்த்து என்னுடைய இரண்டு தங்கச்சிகளையம் புர்ஹா ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களைச் லாக்அப்பில் அடைத்து நிர்வாணப்படுத்தி லத்தியால் தாக்கினர். பின்னர் பூட்ஸ் கால்களாலும் உதைத்தனர். என் மூத்த சகோதரி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தார். காவலர்கள் அவளை வயிற்றிலேயே உதைத்தனர். இதனால் ரத்தம் வடிந்த நிலையில் அவள் சுருண்டு விழுந்துவிட்டாள்.

துப்பாக்கியைக் காட்டி, வெற்றுத்தாளில் கையெழுத்துப் கேட்டு எங்களை மிரட்டினர். இது மட்டுமல்லாமல் எங்கள் மூத்த சகோதரர் எங்கு இருக்கிறார் என சொல்ல சொல்லி விடிய விடிய அடித்துள்ளனர். ஆனால், நாங்கள் அவர் இருக்கும் இடத்தைக் சொல்லவில்லை. என் மூத்த தங்கையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

இந்தச் சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 10-ம் தேதி தர்ராங் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தோம் . ஆனால், அவர் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.

நேற்று அஸ்ஸாம் மாநில ஊடகங்களில் அந்தப் பெண் அளித்த பேட்டியால் தற்போது இந்த விஷயம் வெளியில் வந்துள்ளது.பெண்கள் அளித்த புகாரின் பேரில் புர்ஹா போலீஸ் ஸ்டேஷனில் பெண் கான்ஸ்டபிள் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் தர்ராங் மாவட்ட எஸ்.பி-க்கு அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

click me!