17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... பிக்பாஸ் பிரபலம் மீது பகீர் புகார்..!

By Thiraviaraj RMFirst Published Apr 20, 2021, 10:44 AM IST
Highlights

17 வயது பெண்ணிடம் இரவு 2 மணிக்கு அப்பெண்ணின் புகைப்படங்களை கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் சுதாரித்துக்கொண்டு தனது புகைப்படத்தை அவருக்கு கொடுக்கவில்லை.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்று மக்களுக்கு பிரபலமானார் டேனியல் போப். இவர் நடிகர் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’படத்தில் அறிமுகமானவர். அதன்பின்னர், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்த படத்தில் வரும் “பிரண்டு பீல் ஆயிட்டாரு” என்ற வசனம் மக்களிடையே மிகவும் பரிட்சயம்.
 
அதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது தனது நீண்ட நாள் காதலித்து வந்த டெனிஷா என்ற பெண்ணை கமல் தலைமையில் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக தெரிவித்தார். அதன் பின்னர் கடந்த 2018ம் ஆண்டு டெனிஷாவை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பெண்களுடன் பேசிய மெசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதில் 17 வயது பெண்ணிடம் இரவு 2 மணிக்கு அப்பெண்ணின் புகைப்படங்களை கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் சுதாரித்துக்கொண்டு தனது புகைப்படத்தை அவருக்கு கொடுக்கவில்லை. தற்பொழுது இந்த விவகாரத்தை தொடர்ந்து பல பெண்கள் அவர் இவ்வாறு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக ஆடியோ வாக்குமூலங்கள் தர துவங்கியுள்ளனர். ‘தோணுச்சு சொல்லிட்டோம்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் மெசேஜ்கள் வைரல் ஆகி வருகிறது.
 
இன்ஸ்டாகிராம் பயனாளர் ஜேசன் சாமுவேல் என்பவர் டேனியல் கடந்த 2014ம் ஆண்டு சில பெண்களுடன் தவறாக உரையாடிய நிகழ்வுகளையும் அப்பெண்கள் கொடுத்த ஆடியோ வாக்குமூலங்களை அவர் வீடியோவில் விளக்கியுள்ளார்.

இதையடுத்து டேனியல் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரக்கூடிய வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தும் போலியானவை எனவும், டேனியலின் பெயரை கெடுக்கவே இது போன்ற செயலில் சில விஷமிகள் ஈடுபடுவதாகவும் அவரது வழக்கறிஞர் ரகுமான் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமூக வலைதளங்களில் டேனியல் குறித்து பதிவிட்டு வரும் அவதூறு வீடியோக்கள் புகைப்படங்கள்,மீம்ஸ் போன்றவற்றை உடனடியாக நீக்காவிட்டால் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்

click me!