13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..!

Published : Sep 27, 2020, 05:26 PM IST
13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..!

சுருக்கம்

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவனை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுவன். இவரது அத்தை வீடு ராணிப்பேட்டை மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது. சிறுவன் தனது அத்தை வீட்டுக்கு வந்து அடிக்கடி வந்து செல்வார். அப்போது அத்தை மகளான 13 வயது சிறுமியிடம் பேசுவாராம். இவ்வாறு அடிக்கடி தனியாக சந்தித்து பேசிய நிலையில் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதேபோல், தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மூன்று மாத கர்ப்பிணியானார். இதையறிந்த இருதரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் உறவினர் என்பதால் அவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையில் கர்ப்பமான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சில தினங்களுக்கு முன் அவரது பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 13 வயதில் கர்ப்பமானது குறித்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் மருத்துவர்கள் விசாரித்தனர். அப்போது, சிறுமி நடந்த விவரங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்திற்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட சமூக நலத்துறை சேவை மைய அலுவலர் பிரியங்கா அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்வேணி நேற்று வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு திருமணம் செய்ததாக சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!