பொதுத்தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவிக்கு அரிவாள் வெட்டு; ஒருதலை காதலன் கைது

By Velmurugan s  |  First Published Apr 3, 2023, 7:15 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்து வெளியில் வந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் சோலையப்பன் மாணவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அரசு பள்ளியில் 12 வகுப்பு படித்து வரும் மாணவியை செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தேர்வு எழுதி விட்டு வந்த மாணவியை பள்ளி அருகே வைத்து சோலையப்பன் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளன் தலையில் வெட்டி உள்ளார். 

Tap to resize

Latest Videos

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் சோலையப்பனை தட்டப்பாறை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவியை இளைஞர் அறிவாளால் வெட்டிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!