எங்கே செல்லும் இந்த பாதை; 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் - அரியலூரில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Oct 14, 2023, 6:47 PM IST

அரியலூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.


அரியலூர் மாவட்டம்  செந்துறை அருகே தளவாய் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அதை கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் (17 வயது சிறுவன்) மாணவன் அங்கிருக்கும் கோவில் அருகே சிறுமிக்கு  கடந்த 1ம் தேதி  சிறுமிக்கு பாலியல்  தொந்தரவு கொடுத்துள்ளான்.

இது குறித்து சிறுமியின் தாய்க்கு உடனடியாக தெரிந்திருந்தாலும் அச்சத்தில் இது தொடர்பாக யாரிடமும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மகள் சோர்வாக இருந்ததால் மனம் கேட்காமல் நேற்று 100 க்கு போன் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் தளவாய் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து 12 ஆம் வகுப்பு படிக்கும்  சிறுவனை கைது செய்து  சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

கிருஷ்ணகிரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த நபர் அதிரடி கைது - போலீஸ் விசாரணை

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சிறுவர், சிறுமியரிடம் பாலியல் தொடர்பாக சரியான புரிதல் இல்லாததே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டும் ஆர்வலர்கள் பாலியல் கல்வியை முறையாக அமல் படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பதின்ம வயதில் உள்ள குழந்தைகளை பெற்றோர் முறையாக கண்காணித்து வரவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

click me!