அதிர்ச்சி... டிரைவர் இல்ல... ஒலா புக் பண்ணிக்குங்க..!! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலட்சியத்தால் ஒர் உயிர் பிரிந்தது...!!

By Asianet TamilFirst Published Sep 17, 2019, 2:32 PM IST
Highlights

ஆபத்தில் சிக்கிய கணவனை காப்பாற்ற அவரது மனைவி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தன் கணவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் உடனே வரமுடியுமா என்ற கேட்டார்.

அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என்று கேட்ட பெண்ணிடம், டிரைவர் இல்லை,  ஆம்புலன்ஸ் வராது,  ஓலா வை புக்செய்து போகவும் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மெத்தனமாக பதில் கூறியிருப்பது அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

 

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கணவரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்த அவரின் மனைவிக்குதான் இப்படி பதில் கிடைத்துள்ளது. அதற்கான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த ஆடியோ, ஆபத்து என்று அழைத்தால் அடுத்த  பத்து நிமிடத்தில் ஆபத்பாந்தவனாக வந்து நிற்கும் 108 ஆம்புலன்ஸ் என்ற எண்ணிக்கொண்டிருந்த ஒட்டு மொத்த  மக்களின் நம்பிக்கையையும் குழு தோண்டி புதைத்துள்ளது என்றதான் சொல்ல வேண்டும்.

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் சாரங்கன் அவென்யூ கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேது (42). அதே பகுதியில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார்.நேற்று இரவு தன் வீட்டில் சாப்பிட்ட அவர். மீதம் இருந்த உணவை வீட்டின் வெளியே உள்ள தெரு நாய்களுக்கு வைப்பதற்காக சென்றார். அப்போது தெருவில் சேதமடைந்த நிலையில் இருந்த மின் கம்பம் திடீரென முறிந்து சேதுவின் மீது விழுந்தது. மின்கம்பத்தில் இருந்த வயர்கள் அறுந்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆபத்தில் சிக்கிய கணவனை காப்பாற்ற அவரது மனைவி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தன் கணவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் உடனே வரமுடியுமா என்ற கேட்டார்.

எதிர் முனையிலிருந்த 108 கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள், ஆம்பலன்ஸ் டிரைவர்கள் யாரும் இல்லை, இப்போதைக்கு ஆம்புலன்ஸ் வரமுடியாது, அவரசம் என்றால் ஒலா புக்செய்து கொள்ளுங்கள்  என்று ஆலோசனை கூறி போனை துண்டித்துவிட்டார். பின்னர்  அப்பகுதி மக்கள் உதவியுடன் கணவரை  மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சேது பரிதாபமாக இறந்தார், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் கூறிய அத் தொலைபேசி உரையாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!