20 மாவட்டங்களில் உயரும் கொரோனா..சேலம், ஈரோடு, திருப்பூரில் அதிகளவில் பாதிப்பு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..

By Thanalakshmi V  |  First Published Jan 30, 2022, 8:31 PM IST

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் தற்போது தான் கொரோனா உயர தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 


தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் தற்போது தான் கொரோனா உயர தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னையில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா குறைந்து வருவதாக தெரிவித்தார். அது போல் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் எல்லை பகுதிகளில் தற்போது உயர்ந்து வரும் கொரோனா மீண்டும் குறையும் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 30 லட்சத்திற்கு அதிகமான இளம்வயதினர், தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டார். கொரோனா மூன்றாவது அலையில் முதியவர் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக தெரிவித்த அவர், தடுப்பூசி செலுத்தாவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் தற்போது தான் கொரோனா உயர தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளாது. இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 24,418 ஆக இருந்த பாதிப்பு இன்று சற்று குறைந்து 22,238 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று ஒரு நாள் 3998 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று பாதிப்பு 4508 ஆக இருந்தது. கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில்  38 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு 46. 

கோவையில் 2865 பேரும், செங்கல்பட்டில் 1534 பேரும், திருப்பூர் 1497 பேரும்,ஈரோடு 1127 பேரும், சேலம் 1181 பேரும் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி - 809, கிருஷ்ணகிரி - 612, திருவள்ளூர் -627, தஞ்சாவூர்- 592, திருச்சி 518, நாமக்கல் 572, காஞ்சிபுரம் 494, திருநெல்வேலி 404 என்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

click me!