தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று மட்டுமல்ல, பலி எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று மட்டுமல்ல, பலி எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.
undefined
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று பாதிப்பின் முழு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்டு உள்ள விவரம் வருமாறு:
தமிழகத்தில் இன்று 1233 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு என்பது 26,85,874 ஆக உள்ளது. இன்னமும் 15,022 பேர் சிகிச்சையில் உள்ளனர். 24 மணி நேரத்தில் 1434 போ குணம் பெற்று இருக்கின்றனர்.
ஒட்டு மொத்தமாக குணமானவர்களின் எண்ணிக்கை 26,34,968 ஆக பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 35,884 ஆக இருக்கிறது. சென்னையில் இன்று 160 பேருக்கும், கோவையில் 136 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.