Corona TN : சற்றே குறைந்தது கொரோனா பாதிப்பு... ஒருநாளில் 23,975 பேருக்கு தொற்று... தவிக்கும் தமிழகம்!!

By Narendran S  |  First Published Jan 16, 2022, 7:58 PM IST

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 23,989 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 14 குறைந்து 23,975 ஆக பதிவாகியுள்ளது. 1,40,720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,975 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,975 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 8,987 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 8,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 8,987 ஆக உள்ளது. தமிழகத்தில் 23,957 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 18 பேர் என 23,975 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 


கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 22 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,989 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 11 பேரும் தனியார் மருத்துவமனையில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,42,476 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,31,007இல் இருந்து 1,42,476 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 12,484 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,60,458 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,854 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,701 ஆக குறைந்துள்ளது. அதே போல் கோவையில் 1,732 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,866 ஆக அதிகரித்துள்ளது. 

Tap to resize

Latest Videos


திருவள்ளூரில் 1,478 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,273 ஆக குறைந்துள்ளது. மதுரையில் 550 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 569 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 427 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 529 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 542 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 570 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 697 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 831 ஆக குறைந்துள்ளது. கன்னியாகுமரியில் 659 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 678 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சையில் 443 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 439 ஆக குறைந்துள்ளது. இதேபோல் திருச்சி 453, தி.மலை 328, கிருஷ்ணகிரி 308, கடலூர் 305, வேலூர் 301, ராயப்பேட்டை 275, நெல்லை 256, விருதுநகர் 254, நீலகிரி 244, நாமக்கல் 239  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!