Corona TN : தமிழகத்தில் 27 ஆயிரத்தை நெருங்கியது ஒருநாள் பாதிப்பு... சென்னையில் மட்டும் 8000 பேருக்கு கொரோனா!!

By Narendran S  |  First Published Jan 19, 2022, 9:20 PM IST

தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 23,888 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,093 அதிகரித்து 26,981 ஆக பதிவாகியுள்ளது. 1,50,635 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 26,981 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 26,981 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 8,007 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 8,305 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து 8,007 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 26,949 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 32 பேர் என 26,981 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 35 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,078 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 12 பேரும் தனியார் மருத்துவமனையில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,70,661 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,61,171ல் இருந்து 1,70,661 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 17,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,06,501 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,143 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,194 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் கோவையில் 2,228 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,082 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 854 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 914 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூரில் 517 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 756 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 777 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 906 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 830 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,008 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 643 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 732 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சையில் 453 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 459 ஆக அதிகரித்துள்ளது. நெல்லையில் 707 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 713 ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 532 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 785 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 687 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 718 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் 371 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 638 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் திருச்சி 580, கடலூர் 494, தி.மலை 474, விருதுநகர் 435, நாமக்கல் 359 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

click me!