Corona : தமிழகத்தை உலுக்கும் கொரோனா... 14 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு... சென்னையில் மட்டும் 6000!!

By Narendran S  |  First Published Jan 10, 2022, 8:21 PM IST

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 13,990 ஆக அதிகரித்துள்ளது. 


தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 12,895 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,095 அதிகரித்து 13,958 ஆக பதிவாகியுள்ளது. 1,35,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13,990 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 13,990 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,190 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 6,186 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,186  ஆக இருந்த நிலையில் 4 அதிகரித்து 6,190 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 13,990 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 32 பேர் என 13,990 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,866 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 62,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 2,547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,14,643 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,512 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,696 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் திருவள்ளூரில் 702 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,054 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் 608 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு 602 ஆக குறைந்துள்ளது. வேலூரில் 295 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 236 ஆக குறைந்துள்ளது.  மதுரையில் 348 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 330 ஆக குறைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் 343 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 508 ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் 275 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 348 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் 219 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 238 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நெல்லை 137, விருதுநகர் 222, தூத்துக்குடி 176, கன்னியாகுமரி 244, கடலூர் 162, தி.மலை 149, தஞ்சை 148, சேலம் 133, ஈரோடு 123, கிருஷ்ணகிரி 132, ராணிப்பேட்டை 272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு உள்ளது.

click me!