TN Corona: தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா… சென்னையில் 144 பேருக்கு தொற்று!!

By Narendran S  |  First Published Feb 24, 2022, 8:57 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 618 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 575 ஆக குறைந்துள்ளது. 65,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 618 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

சென்னையில் ஏற்கனவே 156 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 144 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,997 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,913 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,00,144 ஆக உள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 87ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 81 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 72 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 66 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 25, திருப்பூர் 14, சேலம் 17, திருவள்ளூர் 24, திருச்சி 15, காஞ்சிபுரம் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

click me!