தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 439 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 366 ஆக குறைந்துள்ளது. 55,994 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 366 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
undefined
சென்னையில் ஏற்கனவே 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 96 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,004 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,393ல் இருந்து 5,745 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,05,624 ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 66 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 54 ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 51 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 40 ஆக குறைந்துள்ளது. ஈரோடு 12, திருப்பூர் 14, சேலம் 12, திருவள்ளூர் 15, திருச்சி 10, காஞ்சிபுரம் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.