குறையும் கொரோனா..ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை யாரெல்லாம் எடுக்கலாம்..சுகாதாரத்துறை அறிவிப்பு..

By Thanalakshmi V  |  First Published Feb 17, 2022, 4:58 PM IST

யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சுமார் 60 ஆயிரமாக குறைக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
 


மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.நேற்று 85,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 ஆக உள்ளது.சென்னையில் மேலும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே அதிகளவில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழக அரசு இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும்போது தினசரி ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் பரிசோதனையும் குறைக்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்திய அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகளை எளிதாக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா பரிசோதனையை குறைக்க உத்தரவிட்டுள்ளது.சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும். சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் அறிகுறி உள்ளோருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பாசிட்டிவ் நபருடன் தொடர்புடைய 60 வயதிற்கு மேட்பட்டோருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுககு சுழற்சி முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என க்ஷ்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களிடம், ரேன்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர் எனவும் சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக,  கொரோனா பரிசோதனை தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா அறிகுறி உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து இணை நோயுடன் போராடுகிறவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாடு செல்கிற தனி நபர்கள், வெளிநாடுகளில் இருந்து  வருவோர் அனைவரும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

click me!