Corona Puducherry: கொரோனா போயிட்டு..! யாருக்கும் பாசிட்டிவ் இல்லை..பூஜ்ஜியமான தொற்று பதிப்பு..

By Thanalakshmi V  |  First Published Mar 7, 2022, 2:15 PM IST

Corona Puducherry: யூனியன் பிரசேதமான புதுச்சேரில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு பூஜ்யமாக பதிவாகியுள்ளது.அதாவது, கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டவர்களில் இன்று யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.
 


இதுக்குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 157 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு பூஜ்யமாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முழுவதும் சேர்ந்து தற்போது வெறும் 28 பேர் மட்டும் கொரோனா சிகிச்சையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 11 பேர் நோயிலிருந்து விடுப்பட்டுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்தமாக நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,63,755 ஆக பதிவாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று தான் கொரோனா உயிரிழப்பும் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,962 ஆக உள்ளது.சுகாதாரத்துறை இதுவரை 22,20,570 மாதிரிகளை கொரோனா பரிசோதத்தில் 18,65,362 மாதிரிகள் கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இரண்டு தவணையாக மொத்தம் 15,96,951 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!