Corona India : இந்தியாவில் மறுபடியும் லாக்டவுன்.!! கொரோனா அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

By Raghupati R  |  First Published Mar 30, 2022, 5:52 AM IST

சீனாவை போல, இந்தியாவிலும் கொரோனா 4 ஆவது அலை இந்தியாவில் வந்துவிடுமோ அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


மீண்டும் லாக்டவுன் :

மைக்ரான் பரவலின் வேகம் இந்தியாவில் குறைந்த நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்தியாவில் மட்டும் 568 பேருக்கு டெல்டாகிரான் மாதிரி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்துவிட்டதாக நாட்டு மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், சீனாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.  சீனாவை போல, இந்தியாவிலும் கொரோனா 4 ஆவது அலை இந்தியாவில் வந்துவிடுமோ அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு :

அத்துடன் அதன் விளைவாக நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுவிடுமோ என்ற பீதியும் மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது லாக்டவுன் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றை ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு, 'தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 64 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 339 - ஆக குறைந்துள்ளது.

ஊரடங்கு - வாய்ப்பு இல்லை :

கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. சென்னையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 25,105 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் போடும் அளவுக்கு நிலைமை போகாது என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கு மிக முக்கிய காரணம் தடுப்பூசி தான் என்றும் கூறுகின்றனர்.

click me!