Corona India: இன்று ஒரே நாளில் 1,260 பேருக்கு கொரோனா.. 83 பேர் பலி.. இன்றைய அப்டேட்..

By Thanalakshmi V  |  First Published Apr 2, 2022, 11:27 AM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரு நாளில் 83 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
 


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரு நாளில் 83 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரு நாளில் 83 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,21,264 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1404 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் நாட்டில் மொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,92,326 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 98.76 % ஆக உள்ளது.

Tap to resize

Latest Videos

தற்போது நாட்டில் 13,445 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 % ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை நாட்டில் 184.52 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

click me!