இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,897 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,10,586 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,288 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று சற்று அதிகரித்து 2,986 ஆக பதிவாகியுள்ளது.தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.61 சதவீதமாகவும் வாராந்திர தொற்று பாதிப்பு 0.74 சதவீதமாகவும் உள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2,986 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,66,935 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.47 சதவீதமாக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் 19,494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.74 சதவீதமாக உள்ளது.
undefined
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,157 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 190.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 84.19 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,72,190 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா... 53 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!