இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,22 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடி 31 லட்சத்து 38 ஆயிரத்து 393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 கொரோனாவால் பாதிக்கப்பட்ட 46 உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 2,099 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடி 25 லட்சத்து 99 ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,832 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,92,38,45,615 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 8,81,668 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவை முழுமையாக ஒழிக்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.