நாட்டில் கேரளம், மிசோரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனா உறுதியாகும் விகிதம் கவலையளிக்கும் விதத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கேரளம், மிசோரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனா உறுதியாகும் விகிதம் கவலையளிக்கும் விதத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் அனைத்து மாநிலங்களின் புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் போது சுமார் 40 மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து வாராந்திர கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்கள் தொடந்து திவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதனிடயே தற்போது நாட்டில் கொரோனா பரவல் விகிதம் 141 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. அதே போல் 160 மாவட்டங்களில் 5-10 சதவீதத்திற்க்குள் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கேரளம், மகாராஷ்டிரம்,தமிழகம், கர்நாடகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
undefined
கேரளத்தில் கொரோனா உறுதியாகும் விகிதம் 29.57 சதவீதமாக உள்ளது. இதுபோல், இமாச்சலம், மிசோரம், அருணாச்சலம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பரவல் விகிதம் கவலையளிக்கும் விதத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் மூன்றாவது நாளாக தினசரி தொற்று பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,241 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 5,06520 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,67,882 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4,11,80,751 பேர் மொத்தம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு , தற்போது சிகிச்சையில் இருப்போரின் விகிதம் 1.86% ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி 7,90,789 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 1,71,28 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் விகிதம் 4.44 சதவீதமாக குறைந்துள்ளது.