அதிர்ச்சி..! பிப்.,1 ல் பட்ஜெட் தாக்கல்.. நாடாளுமன்ற ஊழியர்கள் 875 பேருக்கு கொரோனா..

By Thanalakshmi VFirst Published Jan 23, 2022, 6:40 PM IST
Highlights

நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் 875 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் 1,409 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஊழிய்ரகள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.  ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரை நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. 

இதில் கடந்த 9 ஆம் தேதி 402 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள் மரப்பணு பகுப்பாய்வு அனுப்பப்பட்டது.மேலும் கொரோனா தொற்று உறுதியானவர்களின் தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத்தின் பணியாற்றும் 875 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மாநிலங்களவை செயலகத்தில் 875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனிடையே நாடாளுமன்றத்திற்கு வெளியே பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஊழியர்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த பல்வேறு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்களுக்கு கீழ் இயங்க வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு தனது ஊழியர்களின் வருகைக்கான பயோமெட்ரிக் பதிவில் இருந்து விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அபாயம் தொடர்ந்து நீடித்து வருவதாக எச்சரித்துள்ள இன்சகாக் அமைப்பு, ஜனவரி 3 க்கு பிறகு இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலில் இருப்பதாகவும், டெல்லி மற்றும் மும்பையில் நகரங்களில் அதுவேகமாக பரவி ஒமைக்ரான்  ஆதிக்கம் செலுத்துவதாகவும்  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!