TN corona:1,310 பேருக்கு கொரோனா தொற்று.. வெறும் 27,294 மட்டுமே சிகிச்சையில்.! முழு விவரம்..

Published : Feb 16, 2022, 09:00 PM IST
TN corona:1,310 பேருக்கு கொரோனா தொற்று.. வெறும் 27,294 மட்டுமே சிகிச்சையில்.! முழு விவரம்..

சுருக்கம்

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 400க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1,325 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,310 ஆக குறைந்துள்ளது. 83,788 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 296பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 303 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 296 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 10 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,956 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 5 பேரும் தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 27,294 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 5,374 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33,75,281 ஆக உள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 231 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 227ஆக குறைந்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில் 113 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 110 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 82 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 77 ஆக குறைந்துள்ளது. திருப்பூர் 66, சேலம் 52, திருவள்ளூர் 46, காஞ்சிபுரம் 37,நாமக்கல் 31 , திருச்சி 30, கன்னியாகுமரி 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்