TN Corona: தமிழகத்தில் குறையும் கொரோனா… 250 க்கும் கீழ் குறைந்த ஒரு நாள் பாதிப்பு..

Published : Mar 05, 2022, 07:49 PM IST
TN Corona: தமிழகத்தில் குறையும் கொரோனா… 250 க்கும் கீழ் குறைந்த ஒரு நாள் பாதிப்பு..

சுருக்கம்

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 250க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 250க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 261 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 223 ஆக குறைந்துள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் எப்போது பட்ஜெட் தாக்கல்..? என்னென்ன திட்டம் அறிவிக்கப்படும்..?அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

51,796 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 223 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 76பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா எண்ணிக்கை 67 ஆக குறைந்துள்ளது.

மேலும் படிக்க: Mekedatu : மேகதாது அணை கட்ட விட முடியாது..இறுதி வரை போராடுவோம்..துரைமுருகன் பரபரப்பு அறிக்கை..

தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,012 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,505 ல் இருந்து 3,131 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 596 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,09,674ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக கோயம்புத்தூர் 29, செங்கல்பட்டு 23 பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சீனாவை பயமுறுத்தும் புதிய கொரோனா வைரஸ்.. XBB வேரியண்ட் இந்தியாவிற்கும் பரவுமா?
குட் நியூஸ்!.. கொரோனா தொற்று இனி அவசரநிலை கிடையாது.. WHO வெளியிட்ட சூப்பர் தகவல்