இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 4,207 ஆக இருந்த நிலையில், இன்று 4,518 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,81,335 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,207 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,81,335 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 4,207 ஆக பதிவான நிலையில் இன்று 4,518 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2,779 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,30,852 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவீதமாக உள்ளது.
மேலும் படிக்க: SRK tests COVID-19 Positive : பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு கொரோனா… கவலையில் ஆழ்ந்த அவரது ரசிகர்கள்!!
தற்போது கொரோனா பாதிப்பினால் 25,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.06 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,24,701 ஆக உள்ளது. நாட்டில் உயிரிழந்தோர் விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 194.12 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,57,187 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்… கடந்த 24 மணி நேரத்தில் 107 பேருக்கு தொற்று!!