மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா... சென்னை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று!!

By Narendran S  |  First Published Apr 21, 2022, 2:39 PM IST

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 முதல் 30 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. சென்னையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து கொரோனா பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐஐடி விடுதியில் தங்கி இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்தும், தேவையான உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா பாதித்த 3 பேரும் தரமணி விடுதியில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னை ஐஐடியில் ஏற்பகனவே 3 பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் நிலையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 18 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானதால் ஐஐடி வளாகத்தில் உள்ள மேலும் 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 8 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா குறைந்து வருவதை கண்டு சற்று ஆறுதல் அடைந்த நிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

click me!