மஹத் வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே; யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை திட்டி தீர்த்த பிரபல நடிகை;

Published : Aug 27, 2018, 12:08 PM ISTUpdated : Sep 09, 2018, 07:34 PM IST
மஹத் வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே; யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை திட்டி தீர்த்த பிரபல நடிகை;

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன மஹத்துக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பிக் பாஸ் பிரபலம், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தான் மஹத்தின் வாழ்க்கையை கெடுத்தவர்கள் என கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மஹத் எலிமினேட் ஆகி இருக்கிறார். ஆரம்பம் முதலே மஹத்தின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லாமல் தான் இருந்து வந்தது. அதிலும் அவர் யாஷிகாவுடன் சேர்ந்து செய்த ரொமான்ஸ் கொஞ்சம் எல்லை மீறவே  இது என்ன மாதிரியான உறவு? உங்களுக்கு தான் வெளியில் பிராச்சினும் ஒரு காதலி இருக்கிறாரே. அவர் தானே உங்களை இங்கு அனுப்பி வைத்தது. அவருக்கு துரோகம் செய்யாதீங்க… என அறிவுறை மழை பொழிந்தனர் மக்கள்

பாவம் பிக் பாஸ் வீட்டில் இருந்த மஹத்திற்கு யாஷிகா மீதான காதல் கண்களை மறைத்துவிட்டது. தொடர்ந்து யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் வார்த்தைகளை மட்டுமே கேட்ட மஹத் பிறரிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். அதிலும் அவர் மும்தாஜிடம் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

மும்தாஜை வெறுப்பேற்றுவது மோசமாக திட்டுவது, டேனியை கடிப்பது, அடிப்பது என வெறிபிடித்தது போல நடந்து கொண்ட மகத்தை இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்தனர் மக்கள். மகத் இப்படி கெட்ட பெயர் வாங்கி வெளியேறியதில் பலருக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டிருந்தது. மேலும் இதற்கெல்லாம் காரணம் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா தான் என்றும் பலர் திட்டி இருக்கின்றனர்.அதில் பிக் பாஸ் பிரபலம் ஹாரதியும் ஒருவர்.

 

சினிமாவில் ஹீரோவாக வலம் வரவேண்டிய மஹத்,  யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவால் இப்படி ஆகி விட்டார் என்பதை குறித்து ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்த இரண்டு பெண்களும் ஹீரோவின் வாழக்கையை வீணாக்கி விட்டனர். மஹத் மாதிரியான ஆண்கள் இது போன்ற பெண்களிடம் இனியாவது கவனமாக இருங்கள். மகத்தின் காதலி பிராச்சி கண்டிப்பாக மஹத்தின் பிரச்சனைகளை புரிந்து கொள்வார். அவர்கள் இணைந்து சந்தோஷமாக வாழ்வார்கள் என தெரிவித்திருக்கிறார் ஹாரதி.

PREV
click me!

Recommended Stories

வில்லி தான் ஜெயிக்கிறாள்! 'கார்த்திகை தீபம்' சீரியல் கதையால் ரசிகர்கள் கொதிப்பு: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!