நீலகிரி.. ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் வேலை.. 35,000 ரூபாய் சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

By Ansgar R  |  First Published Feb 5, 2024, 5:31 PM IST

Rural Development Office Jobs : டிஸ்ட்ரிக்ட் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் யூனிட் என்று அழைக்கப்படும் மாவட்ட திட்ட மேலாண்மை அலகிற்கு தற்பொழுது தகுதி வாய்ந்த நபர்களை வேலைக்கு அமர்த்த ஆவணம் செய்துள்ளது நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம்.


ஊரக வளர்ச்சி அலகு, நீலகிரி மாவட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதகமண்டலம் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட திட்ட மேலாண்மை அழகு மற்றும் தகவல் கல்வித் தொடர்பு குழு பிரிவுகளுக்கு கீழ்க்கண்ட பணியிடங்கள் அவுட்சோர்சிங் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை நீலகிரி மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி அலுவலகம் வெளியிட்டு இருக்கிறது.

பணி விபரம்

Tap to resize

Latest Videos

undefined

மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் Planning, Convergence and Monitoring பணிகளுக்கு ஆட்கள் தேவை.
IEC Consultant 

கல்வி தகுதி 

B.Tech, MBA, MSC படித்தவர்கள் இந்த பணியில் சேரலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 

பிப்ரவரி 6 2024

விண்ணப்பிக்கும் முறை 

உரிய கல்வி சான்றிதழ், முன்னனுபவ சான்றிதழ் உள்ளிட்டவையோடு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம். நாளை பிப்ரவரி 6ம் தேதி மாலைக்குள் இந்த விண்ணப்பங்கள் சென்றுசேர வேண்டும். 

விண்ணப்பிக்கும் முகவரி

கூடுதல் ஆட்சியர் (வ) / திட்ட அலுவலர், 
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,
உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் - 643001.

10ம் வகுப்பு படித்தால் போதும்.. இஸ்ரோவில் சேர அருமையான வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ !!

click me!