நீங்களும் சுனிதா வில்லியம்ஸ் மாதிரி விண்வெளி செல்ல வேண்டுமா? இந்த செய்தி உங்களுத்தான்!!

Published : Mar 19, 2025, 01:53 PM IST
நீங்களும் சுனிதா வில்லியம்ஸ் மாதிரி விண்வெளி செல்ல வேண்டுமா? இந்த செய்தி உங்களுத்தான்!!

சுருக்கம்

சுனிதா வில்லியம்ஸ் மாதிரி விண்வெளி வீரராக ஆசை இருக்கா? என்ன டிகிரி படிக்கணும், எப்படி பயிற்சி எடுக்கணும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். 

Astronaut Career Guide, Degree: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பி வந்துள்ளார். இவரது பயணம் விண்வெளி வீரராவது எவ்வளவு கடினம் என்பதை நமக்கு மர்பிக்கிறது. நீங்களும் விண்வெளி வீரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டால், முதலில் இந்த செய்தியை படிக்கவும். 

How to be Astronaut like Sunita Williams: நாசாவின் விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து பூமிக்கு வருவதற்கு கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. இவர் 8 நாட்களுக்கு மட்டுமே ஸ்பேஸ் சென்று இருந்தார். ஆனால், ஸ்பேசில் டெக்னிக்கல் கோளாறு காரணமாக 9 மாதங்கள் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. விண்வெளி வீரர் ஆவது கடினம். சுனிதா வில்லியம்ஸ் மாதிரி நீங்களும் விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டால், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும். மனசில் தைரியம் வேண்டும். நல்ல படிப்பு இருக்க வேண்டும்.  கஷ்டமான பயிற்சி எடுக்க வேண்டும். விண்வெளி வீரர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும். என்ன டிகிரி வேண்டும், எந்த இன்ஸ்டிடியூட்டில் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க. தெரிஞ்சுக்கலாம்.

விண்வெளி வீரர்கள் யார்? (Who are astronauts)
விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்க்கு செல்கிறவர்கள். அவர்கள் அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். டெக்னாலஜி ஆராய்ச்சி செய்வார்கள். NASA, ISRO, ESA, Roscosmos மாதிரி ஏஜென்ஸியில் வேலை செய்வார்கள். 

விண்வெளி வீரர் ஆக என்ன தகுதி வேண்டும்?  (Qualifications to become an Astronaut)
விண்வெளி வீரர் ஆவதற்கு சில படிப்பு தகுதியும், உடல் ஆரோக்கிய தகுதியும் வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கில் டிகிரி பெற்று இருக்க வேண்டும். இயற்பியல், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அஸ்ட்ரானமி, பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் மாஸ்டர் டிகிரி இல்லை என்றால்  பிஹெச்டி செய்து இருந்தால் நல்லது. 

விண்வெளி வீரராக என்ன அனுபவம் இருக்க வேண்டும்? 
விண்வெளி வீரராக பைலட், விஞ்ஞானி இல்லை என்றால் பொறியியல் வல்லுனராக மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். அறிவியல் நிறுவனம் அல்லது ஸ்பேஸ் அமைப்பில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும். 

விண்வெளி வீரராக உடல் ஆரோக்கியம் எப்படி இருக்க இருக்க வேண்டும்? (Physical ability required to become an astronaut)
விண்வெளி வீரராக உடல்  ஆக உடம்பு நல்லா ஃபிட்டா இருக்கணும். சரியான பிஎம்ஐ, பிளட் பிரஷர், நல்ல பார்வை (20/20) இருக்கணும்.

விண்வெளி வீரர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்? (What is the process to become an astronaut)
விண்வெளி வீரர் ஆவதற்கு கடினமான தேர்வு நடைமுறை இருக்கிறது. NASA, ISRO, ESA அவ்வப்போது விண்வெளி வீரர்களை தேர்வு செய்வார்கள். அதில் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு இருக்கும். தொழிநுட்பம், அறிவியல், ஆப்டிடியூட் தேர்வுகள் இருக்கும். இவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். மருத்துவ பரிசோதனை, மனரீதியான தேர்வு ஆகியவற்றை சோதித்துப் பார்ப்பார்கள். தேர்வானவர்களுக்கு இரண்டில் இருந்து நான்கு ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். 

விண்வெளி வீரர் பயிற்சி எப்படி இருக்கும்? (Astronaut Training Details)
விண்வெளி வீரர்களுக்கு பல பயிற்சிகள் கொடுப்பார்கள். ஸ்பேஸ் செல்வதற்கு தயாராவதற்கான பயிர்களை அளிப்பார்கள். 

ஜீரோ கிராவிட்டி (Zero Gravity) பயிற்சி- வெயிட் இல்லாமல் இருப்பதற்கான பயிற்சி 

தண்ணீருக்குள் மற்றும் ஸ்பேஸ்சில் நடப்பதற்கு பயிற்சி அளிப்பார்கள். 

வேகமா சுத்துவதற்கான பயிற்சி 

உயிர் பிழைப்பதற்கான மற்றும் அவசரகதியாக தரையில் இறங்குவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.  

ஸ்பேஸ் கிராஃப்ட் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி

இந்தியாவில் விண்வெளி வீரர் ஆவதற்கான சிறந்த நிறுவனங்கள்: 
இந்தியாவில் விண்வெளி வீரர் ஆக வேண்டும் என்றால் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும்  இன்ஸ்டிடியூட்களில் படிக்கலாம்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (IISc), பெங்களூர்- ஏரோஸ்பேஸ், அஸ்ட்ரானமி ரிசர்ச்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IITs)- ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ரோபோட்டிக்ஸ்
இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன் (ISRO)- விண்வெளி வீரர் செலக்சன், பயிற்சி
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NITs)- இன்ஜினியரிங், ரோபோட்டிக்ஸ்

விண்வெளி வீரர் சம்பளம் (What is the salary of astronauts)
NASA-வில் ESA விண்வெளி வீரர்களுக்கு துவக்கத்தில் 66,000 டாலரில் இருந்து 144,000 டாலர் வரை  சம்பளம் கிடைக்கும். ISRO-வில் 2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை கொடுப்பார்கள். ஸ்பேஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர், விண்வெளி கட்டுப்பாட்டு அதிகாரி, ஏரோஸ்பேஸ் பொறியாளர்,  வானியல் பேராசிரியர் போன்ற வேலைகள் கிடைக்கும் 

ISRO-வில் விண்வெளி வீரர் ஆக முடியுமா?
ஆகலாம். ISRO இந்திய விண்வெளி வீரர்களுக்கு ககன்யான் விண்வெளிக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். இந்திய விமானப்படை பைலட்ஸ்க்கு ISRO பயிற்சிக்கு பின்னர் ரஷ்யாவில்  விண்வெளி பயணத்துக்கு பயிற்சி கொடுக்கிறார்கள். விண்வெளி வீரர் அவது எளிதானது இல்லை.  ஆனால், உங்களிடம் சரியான டிகிரி, நல்ல உடல் ஆரோக்கியம், கடினமான பயிற்சி எடுப்பதற்கான பொறுமை இருக்க வேண்டும். அப்போதுதான் கனவு நினைவாகும். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now