தூத்துக்குடியில் உள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவுகளில் வேலை வாய்ப்பு. விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்.
தூத்துக்குடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தில், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவுகளில் இளைஞர்களுக்கு ஒரு அற்புதமான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை டிப்ளமோ முடித்த ஆண், பெண் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: இன்ஜினியரிங் டிப்ளமோ முடிச்சிட்டு நல்ல வேலை கிடைக்கலையா? கவலையை விடுங்க! HP-ல் வேலை வாய்ப்பு
வேலை விவரங்கள்:
பணி: டிரெய்னி பிரெஷர்ஸ்
கல்வித் தகுதி: டிப்ளமோ (மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல்)
வயது: 18 முதல் 25 வரை
சம்பளம்: ரூ. 20,000/-
பிற சலுகைகள்: போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி
நேர்காணல் விவரங்கள்:
நேர்காணல் நடைபெறும் இடம்: வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், பிளாட் நம்பர் B - 1 / 11., சிப்காட் தொழில் பூங்கா, ஓட்டப்பிடாரம், சில்லாநத்தம், தூத்துக்குடி.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம் : 01 - 04 - 2025 முதல் 04 - 04 - 25 ஆம் தேதி வரை காலை 8:30 மணி முதல்
தொடர்பு கொள்ளவும்: திரு. ரியாஸ், செல்: 9962362244.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த வேலை வாய்ப்பு, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். எனவே, தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.