தேசியத் தேர்வு முகமை ஏப்ரல் 2 முதல் 4 வரை நடக்கும் JEE மெயின் தேர்வின் 2வது அமர்வுக்கான அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற வலைத்தளத்தில் அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யலாம். தேர்வுகள் ஏப்ரல் 2, 3, 4, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும். ஏப்ரல் 8ஆம் தேதியில் மாலை நேர ஷிப்டு மட்டுமே இருக்கும்.
தேசிய தேர்வு முகமை (NTA), ஏப்ரல் 2 முதல் 4 வரை நடக்கும் JEE மெயின் தேர்வின் 2வது அமர்வுக்கான நுழைவுச் சீட்டை வெளியிட்டுள்ளது. இந்தத் தேதிகளில் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் அட்மிட் கார்டுகளை சரிபார்த்து டவுன்லோட் செய்துள்ளலாம். அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in மூலம் அட்மிட் கார்டைப் பெறலாம்.
JEE முதன்மை 2025 அமர்வு 2 அட்டவணையின்படி, தேர்வுகள் ஏப்ரல் 2, 3, 4, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும். மீதமுள்ள தேர்வு தேதிகளுக்கான அட்மிட் கார்டு விரைவில் வழங்கப்படும். JEE மெயின் தேர்வு 2வது அமர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும். இருப்பினும், ஏப்ரல் 8ஆம் தேதி தேர்வு மாலை ஷிப்டில் மட்டுமே நடைபெறும்.
‘ஏப்ரல் 2, 3 மற்றும் 4, 2025 அன்று தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 28, 2025 முதல் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in இலிருந்து JEE (Main) 2025 அமர்வு 2 இன் அட்மிட் கார்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதில் உள்ள வழிமுறைகளையும் தகவல்களையும் படிக்க வேண்டும். ஏப்ரல் 7, 8 மற்றும் 9, 2025 ஆகிய தேதிகளில் நடக்கும் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.’ என தேசியத் தேர்வு முகமையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வின் 2வது அமர்வில் தேர்வு எழுதும் விண்ணப்பித்தவர்கள் தங்கள் அட்மிட் கார்டை டவுன்லோட் செய்ய பின்வரும் வழிமுறையைப் பின்பற்றலாம்:
1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in க்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில், ‘Download JEE (Main) 2025 - admit card’ என்று எழுதப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பி submit என்பதைக் கிளிக் செய்யவும்.
4. ஜேஇஇ மெயின் 2025 அமர்வு 2 இல் உங்களுக்கான அட்மிட் கார்டு திரையில் தோன்றும். அதை பிரிண்டு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து நேரடியாக அட்மிட் கார்டு டவுன்லோட் செய்யும் பக்கத்துக்குச் செல்லலாம்.
JEE(Main) 2025 - Session 2 - Admit Card Download
தேர்வர்கள் இதுகுறித்த மேலதிகத் தகவல் பெற, தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.