100 அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்பு! AI பயிற்சி மையங்கள்! இளைஞர் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள். முழு விவரங்கள் இங்கே!
தமிழ்நாடு அரசு, இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், அவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை வழங்கவும் அதிரடியான திட்டங்களை அறிவித்துள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிவிப்புகள், கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளது.
100 அரசு கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி!
பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு கல்லூரி மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை வழங்கும் வகையில், "நான் முதல்வன்" SCOUT திட்டத்தின் கீழ் 100 திறமையான இளங்கலை மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் 1.50 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
"நான் முதல்வன்" பல்கலைக்கழக செயல் மையங்கள்!
கல்லூரி மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்த, 11 பல்கலைக்கழகங்களுடன் இணைந்து "நான் முதல்வன்" பல்கலைக்கழக செயல் மையங்கள் அமைக்கப்படும். 1.10 கோடி ரூபாய் முதலீட்டில் நவீன வசதிகளுடன் இந்த மையங்கள் செயல்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டத்தை உருவாக்க 1.50 கோடி ரூபாயில் பாடத்திட்ட சீரமைப்பு மற்றும் மதிப்பீடு பிரிவு அமைக்கப்படும்.
AI பயிற்சி மற்றும் உயர் திறன் மையங்கள்!
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, SHELL மற்றும் Microsoft நிறுவனங்களுடன் இணைந்து உயர் திறன் மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 25,000 பெண்கள் பயிற்சி பெறுவார்கள். இந்த திட்டத்திற்கு 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் திறன் பள்ளிகள்!
கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த, 1 கோடி ரூபாய் செலவில் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் திறன் பயிற்சிகள் நடத்தப்படும். மேலும், 5 கோடி ரூபாய் செலவில் 2,500 சமுதாய திறன் பள்ளிகள் அமைக்கப்படும். இதன் மூலம் 42,000 கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
முக்கிய அம்சங்கள்:
இந்த திட்டங்கள், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பயனுள்ள 8 முறைகள்