1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!

1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

TRB announcement regarding the filling of 1,000 secondary teacher posts ray

TRB announcement filling of 1,000 secondary teacher posts: தமிழ்நாட்டில் கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கூடுதலாக 1,000 இடங்கள் சேர்த்து மொத்தம் 2,768 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கடந்த ஜூலை 16ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

Latest Videos

தற்போது இந்த பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. பொதுப் பிரிவு, பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவுகளின் கீழ் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற விவரம் முழுமையாக அதில் கூறப்பட்டுள்ளது. முதன்முதலாக இடைநிலை ஆசிரியர் பதவிக்கான 1,768 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 09.02.2024 அன்று வெளியிட்டு இருந்தது. 

தேர்வுகள் எப்போது நடந்தது?

இதன்பிறகு 15.03.2024 வரை இந்த காலிபணியிடங்களுக்கான ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த தேர்வுக்கு 26,510 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 16.07.2024 அன்று இந்த பணியிடங்களுடன் சேர்த்து கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்கள் சேர்ப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன்பிறகு ஜூலை 21ம் தேதி இதற்கான தேர்வுகள் நடந்தன. 

டிகிரி முடித்தவர்களுக்கு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: TNPDCL Recruitment

எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கை

இதன்பிறகு 7 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், தேர்விற்கான விடைக்குறிப்பு கூட வெளியிடவில்லை. அது குறித்த எந்தவித அப்டேட்களும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது 1000 பணியிடங்களுக்கான முழு இடஒதுக்கீடு விவரங்களை https://trb.tn.gov.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் காணலாம்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்த சூழ்நிலையில்  கூடுதலாக 1,000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

vuukle one pixel image
click me!