தேர்வர்களே !! இனி என்னென்ன போட்டி தேர்வுகள் ..? அடுத்து எந்தெந்த அரசு வேலைக்கு ரெடியாகலாம்..? முழு விவரம்

By Thanalakshmi V  |  First Published Aug 14, 2022, 6:10 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதே போல், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், எஸ்.எஸ்.சி ஆகியவைகளும் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் நடைபெறும் உள்ள போட்டித் தேர்வுகள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
 


கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் பணி: 

மொத்தம் காலி பணியிடங்கள் - 1089

Tap to resize

Latest Videos

விண்ணப்பிக்கும் தேதி- 24 .08.2022

தகுதி:  பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

தொழில் ஆலோசகர் மற்றும் சமூக அலுவலர் பணி: 

மொத்தம் காலி பணியிடங்கள் - 16

விண்ணப்பிக்கும் தேதி - 26.08.2022

தகுதி : தொழில் ஆலோசகர்  -  சமூக பணித் துறையில் மருத்துவம் மற்றும் சமூக உளவியல் பாட நெறிகளை சிறப்பு பாடமாகக் கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சமூக அலுவலர் - சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அரசு மற்றும் அரசு சாராத துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் சமூக மேம்பாட்டுப் பணிகளில் பணியாற்றிய அனுபவம் வேண்டும்

குரூப் I தேர்வு: 

மொத்தம் காலி பணியிடங்கள்: 92

விண்ணப்பிக்கும் தேதி: 22.08.2022

தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மேலும் படிக்க: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை .. முழு விவரம்

வனத்தொழில் பழகுநர்: 

மொத்தம் காலி பணியிடங்கள்: 10

விண்ணப்பிக்கும் தேதி: 06.09.2022

தகுதி: வனவியல் அல்லது அதற்கு இணையான கல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை ஆகிய ஏதேனும் ஒரு படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்கலாம்.

 ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி: 

மொத்தம் காலி பணியிடங்கள்:6932

விண்ணப்பிக்கும் தேதி: 22.08.2022

தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு துறையில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மத்திய அரசு அங்கீகரித்த அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படைகளில் உதவி ஆய்வாளர் பணி

மொத்தம் காலி பணியிடங்கள்:3960

விண்ணப்பிக்கும் தேதி: 30.08.2022

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெல்லி காவல்துறை உதவி ஆய்வாளர் (ஆண்) பதவிகளுக்கு மட்டும் ஓட்டுநர் உரிமை கட்டாயமாகும். 

மேலும் படிக்க:மத்திய ஆயுதப்படையில் 3,960 காலி பணியிடங்கள்.. ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்ட எஸ்எஸ்சி..எப்படி விண்ணப்பிப்பது?

2ம் நிலை காவலர் பணி: 

மொத்தம் காலி பணியிடங்கள்:3552

விண்ணப்பிக்கும் தேதி: 15.08.2022

தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மருந்தாளுனர் பணி:

மொத்தம் காலி பணியிடங்கள்: 889

விண்ணப்பிக்கும் தேதி: 30.08.2022

தகுதி: மருத்துவம் சார்ந்த துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

click me!