பட்டதாரி ஆசிரியர் பணி தகுதிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் வருகின்ற ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை கணினி வழியாக நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தகுதித் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகின்றன. அதன்படி முதல் தாள் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை கணினி வழியாக நடைபெற்றது. இந்தத் தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 023 பேர் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் 7ம் தேதி வெளியான நிலையில், தேர்வர்களில் வெறும் 14% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
ஓசூரில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம்: கிராம மக்கள் அச்சம்
undefined
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் தேர்வு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 31ம் தேதி கணினி வழியாக தொடங்கும் இரண்டாம் தாளுக்கான தேர்வு பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணினி வழித் தேவை எழுதவுள்ள பட்டதாரிகள் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பயிற்சி மேற்கொள்ளலாம். விரிவான தேர்வு கால அட்டவணை, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு வெளியீடு உள்ளிட்ட விவரங்கள் ஜனவரி 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.