ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு உள்ளதாக வெளியான அறிவிப்பு… மறுப்பு தெரிவித்த ரயில்வே அமைச்சகம்!!

By Narendran SFirst Published Jan 11, 2023, 7:03 PM IST
Highlights

ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு உள்ளதாக வெளியான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளதோடு இது போலியான அறிவிப்பு என்று தெரிவித்துள்ளது. 

ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு உள்ளதாக வெளியான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளதோடு இது போலியான அறிவிப்பு என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 19800 கான்ஸ்டபிள் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்திகள் பரவியது. இந்த நிலையில் இது போன்ற எந்த அறிவிப்பும் RPF அல்லது ரயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கங்கா விகாஸ் கப்பலில் ஒரு ஜாலியான பயணம்! நீங்க ரெடியா!

மேலும் ரயில்வே அனைத்து விண்ணப்பதாரர்களும் இதுபோன்ற ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை புறக்கணிக்குமாறும் ரயில்வே அமைச்சகம்  வலியுறுத்தியுள்ளது. இதுக்குறித்து வெளியான அறிக்கையில், விண்ணப்பதாரர்கள் RRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். வேறு எந்த ஆதாரங்கள் வழியாகவும் வெளியாகும் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம். மேலும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அறிவிப்புகளை தயவு செய்து புறக்கணிக்கவும்.

இதையும் படிங்க: போபால் விஷவாயு கசிவுக்கு கூடுதல் இழப்பீடு கேட்பது ஏன்?: உச்ச நீதிமன்றம் கேள்வி

செல்வாக்கு மூலமாகவோ அல்லது நியாயமற்ற வழிகளைப் பயன்படுத்தியோ ரயில்வேயில் வேலையைப் பெறுவதாக பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்ற முயற்சிக்கும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் மோசடி செய்பவர்களிடம் ஜாக்கிரதை இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பில், ஒவ்வொருவரிடம் இருந்தும் 2 லட்சம் முதல் 24 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி 2.5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!