இந்து சமய மற்றும் அறநிலையத்துறை வேலை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (TNHRCE) பல்வேறு வேலை காலியிடங்களை தற்போது அறிவித்துள்ளது. இந்த பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26.12.2022 முதல் 20.01.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முறை போன்றவை பற்றி இதில் பார்க்கலாம்.
அமைப்பு : இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
பணியின் பெயர் : நிர்வாக பொறியாளர்
வேலை இடம் : சென்னை
தொடக்கத் தேதி : 26.12.2022
கடைசி தேதி : 20.01.2023
கல்வித் தகுதி :
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு : எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் - அதிகபட்சம் 65 வயது
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இதையும் படிங்க..அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
சம்பள விவரங்கள் :
*நிர்வாக பொறியாளர் - ரூ. 35,000/-
*உதவி செயற்பொறியாளர் - ரூ. 30,000/-
*உதவி பொறியாளர் - ரூ. 25,000/-
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிப்பது எப்படி ? :
அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhrce.gov.in என்ற தளத்திற்குச் சென்று அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதும் படிக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு தகுதி பெற்றவர் எனில், விண்ணப்பத்தினை பதிவிறக்க செய்து, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது போல செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான தகவலுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அது சரியானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும். பிறகு மறக்காமல் நிர்வாக பொறியாளர் பதவிக்கான விண்ணப்பத்தை எழுதவும். விண்ணப்ப படிவத்தை அனுப்ப அந்தந்த முகவரியை எழுத வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119 உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034.
இதையும் படிங்க..NPCIL Recruitment 2023 : இந்திய அணுசக்தி கழகத்தில் 89 காலியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க !