டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
undefined
அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது. இதனையடுத்து, சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு கடந்த 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி (இன்று) வரை நடைபெற்றது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..
அதன்படி டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பெற்ற நேர்காணல் பணியிட தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 161 பணியிடங்களுக்கான பதிப்பெண் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களை டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரபூர்வ வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?