முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியானது... உடனே ரிசல்ட் பார்க்க இதை செய்யுங்க..!

By Kevin Kaarki  |  First Published Jul 5, 2022, 2:19 PM IST

தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.


தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்  முதுநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் TRB-இன் அதிகாரப்பூர்வ வலைதளம் - trb.tn.nic.in மூலம் தேர்வு முடிவுகளை பார்க்க முடியும். தேர்வு முடிவுகளை பார்க்க முற்படும் போது அவர்களின் ரோல் நம்பர் மற்றும் பிற சான்றிதழ் விவரங்களை குறிப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்: சிபிஎஸ்இ தேர்வு முடிவு இன்று வெளியீடு கிடையாது.. அதிகாரப்பூர்வ தகவல்.. முழு விவரம்..

Tap to resize

Latest Videos

முதுகலை உதவியாளர் உடற்கல்வி இயக்குனர்கள் கிரேடு 1 மற்றும் கணினி பயிற்றுனர் கிரேடு 1 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. குறிப்பிடப்பட்ட பதவிகளின் கீழ் மொத்தம் 2 ஆயிரத்து 707 காலி பணி இடங்கை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வு பல்வேறு தேர்வு மைங்களில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: சிபிஎஸ்இ தேர்வு முடிவு தேதி மாற்றம்.. 10 ஆம் வகுப்பு முடிவுகள் ஜூலை 13 ல் வெளியீடு என தகவல்..

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

1 - முதலில் தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம்- trb.tn.nic.in செல்ல வேண்டும்

2 - அதன் பின் ஆசிரியர் தேர்வு வாரிய முகப்பு பக்கத்தை திறக்க வேண்டும்

3 - இனி “TRB PG Assistant Result 2022” என்ற லிண்க்-ஐ கண்டறிந்து க்ளிக் செய்ய வேண்டும்

4 - இதைத் தொடர்ந்து திறக்கும் வலைப்பக்கத்தில் உங்களின் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்

5 - விவரங்களை பதிவிட்ட பின் சமர்ப்பி என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

6 - இனி உங்களின் தேர்வு முடிவு அடங்கிய PDF திரையில் தெரியும்

7 - தேர்வு முடிவு அடங்கிய PDF தரவை அப்படியே தரவிறக்கம் செய்து கொள்ளவும். தேவைப்படும் பட்சத்தில் அதனை ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்

இதையும் படியுங்கள்: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது!..

TRB PG Assistant Result 2022 முடிவுகளை காண இங்கு க்ளிக் செய்ய வேண்டும்

தேர்வு முடிவுகள் மட்டும் இன்றி கட் ஆஃப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டு இருக்கிறது. கட் ஆஃப் மதிப்பெண்கள் தேர்வில் முதுகலை உதவியாளர், உடற்கல்வி இயக்குனர் கிரேடு 1 மற்றும் கணினி பயிற்றுனர் கிரேடு 1 பதவிகளுக்கு தகுதி பெற குறைந்த பட்ச மதிப்பெண்கள் ஆகும்.

தேர்வில் அதிக மதிப்பெண் அல்லது கட் ஆஃப்-க்கு இணையான மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு முறையின் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர். கட் ஆஃப் மதிப்பெண்கள் மொத்த காலி பணி இடங்களின் எண்ணிக்கை, மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் கட் ஆஃப் மதிப்பெண், வகை வாரியான மதிப்பெண் மற்றும் பிற காரணங்கள், தேர்வின் கடின நிலை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

click me!