தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அரசு பணிக்கான தேர்வை எழுதுபவர்களுக்கு உறுதுணையாக பல இணையதளங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் மாதிரி வினாத்தாள் முதல் தேர்வு தேதி, அறிவிப்பு மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
TN TET தேர்வு:
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களும் பெறப்பட்டது .
பின்னர் TET முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முதல் முறையாக கணினி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு TRB இணையதளம் வாயிலாக 15 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ExamsDaily வலைத்தளம் மூலம் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வு நாளை (29.08.2022) நடைபெற உள்ளது. TET சமூக அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வில் கலந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.