தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் சார்பில் மொத்தம் 274 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாநில மையத்தில் 8 காலிப்பணியிடங்களும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மாவட்ட மையத்தில் 266 காலிப்பணியிடங்களுக்குமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாநில மையம் (SHEW) மாநிலத்தின் மக்கள் தொகை / புவியியல் பகுதியைப் பொறுத்து 8 பேர் வரை கொண்ட குழுவைக் கொண்டிருக்கும். குழுவில் பாலின நிபுணர் 2 பேர், விழிப்புணர்வு, உருவாக்கம் மற்றும் ஒன்றிணைந்த நிதி கல்வியறிவு மற்றும் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான நிபுணர்கள் உள்ளனர். இதில், 8 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மாநில பணி ஒருங்கிணைப்பாளர் - 1, பாலின நிபுணர் - 2, ஆராய்ச்சி & பயிற்சி நிபுணர் - 2, கணக்கு உதவியாளர் - 1, கணினி அறிவுடன் கூடிய அலுவலக உதவியாளர் - 1, MTS - 1 ஆகிய 8 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல், பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாவட்ட மையம் (DHEW) மாவட்டத்தின் மக்கள் தொகை/புவியியல் பகுதியைப் பொறுத்து 8 பேர் கொண்ட சிறப்புக் குழுவைக் கொண்டிருக்கும். HEW இன் கீழ் செயல்படும் நடவடிக்கைகள் கிராம பஞ்சாயத்து நிலை வரை மாவட்ட அளவிலான மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவிலான மையங்கள் மைய புள்ளிகளாக செயல்படும்.
மிஷன் சக்தி வழிகாட்டுதல்களின்படி, பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாவட்ட மையத்தில் 38 இடங்களுக்கு 7 பணியாளர்கள் வீதம் மொத்தம் 266 காலிப்பணியிடங்களுக்குமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு விவரம்
காலிப் பணியிடங்கள் விவரம்
பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாநில மையம் (SHEW) - 8
பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாவட்ட மையம் (DHEW) - 38*7=266
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் காத்திருக்கும் வேலை - முழு விபரம்
சம்பள விவரம்
பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாநில மையம் (SHEW) - ரூ.12,000 முதல் ரூ.52,000 வரை
பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மாவட்ட மையம் (DHEW) - ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், https://tnsw.in/tnswd_job_app_form/ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2023 ஆகும்.