கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 4 லட்சம் விண்ணப்பதாரர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
CUET என்று அழைக்கப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு(இளங்கலை படிப்பு)க்கான 2023ம் ஆண்டு முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தலைவர் எம். ஜெகதீஷ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் காத்திருக்கும் வேலை - முழு விபரம்
தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவ மாணவிகள் தங்கள் மதிப்பெண் குறித்து cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். CUET முடிவுகளைச் சரிபார்க்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி லாகின் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
தடையின்றி தேர்வு முடிவுகளை மாணவர்கள் காண்பதற்காக அவசரம் இல்லாமல் மிகச்சரியாக அவை பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் CUET UG 2023க்கான தங்கள் பதிவைச் சமர்ப்பித்துள்ளனர்.