10ம் வகுப்பு போதும்.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை.. முழு விபரம் உள்ளே !!

By Raghupati R  |  First Published Aug 21, 2023, 4:11 PM IST

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 இடங்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காலியான பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த காலியிடங்கள் டிரைவர் மற்றும் கண்டக்டர் பதவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு வேலைகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.08.2023 முதல் 18.09.2023 வரை ஆன்லைனில் பதிவு செய்யவும்.

Tap to resize

Latest Videos

undefined

இப்பணிக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் நியமிக்கப்படுவார்கள். 10வது பாஸ் செய்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி, அதாவது கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் மற்றும் பலவற்றைச் சரிபார்க்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும். 

பணியின் பெயர் : டிரைவர் மற்றும் கண்டக்டர்
மொத்த காலியிடங்கள் : 685
வேலை இடம் : தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி 18.08.2023 மதியம் 1.00 மணி, அதேபோல விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 18.09.2023 மதியம் 1.00 மணி ஆகும். கல்விதகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி & தமிழ் பேச, படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் வயது வரம்பு ஆனது (01.01.2023 தேதியின்படி) 24 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

அதிகாரப்பூர்வ இணையதளமான www.arasubus.tn.gov.in செல்லவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தகுதியைச் சரிபார்க்கவும்.நீங்கள் புதிய பயனராக இருந்தால், நீங்கள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் கணக்கில் உள்நுழைந்து விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம். உங்கள் விவரங்களைச் சரியாக உள்ளிட்டு பணம் செலுத்துங்கள். இறுதியாக சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுக்கவும்.

இந்திய சமையல்காரர்களை அழைக்கிறது சிங்கப்பூர்! குறைந்தபட்சம் 1.2 லட்சம் சம்பளம்!

click me!