டிப்ளமோ படித்தவர்களுக்கு அரசு மருத்துமனையில் வேலை.. எங்கே? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவரம்!

Ansgar R |  
Published : Aug 20, 2023, 02:57 PM IST
டிப்ளமோ படித்தவர்களுக்கு அரசு மருத்துமனையில் வேலை.. எங்கே? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவரம்!

சுருக்கம்

GMCH தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2023 - தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய டிப்ளோமா நர்சிங் படித்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு. இதுகுறித்து இந்த பதிவில் முழு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிய Trauma Registry Assistant தேவை என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

கல்வி தகுதி 

டிப்ளமா நர்சிங் அல்லது அந்த துறை சார்த்த பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். '

இந்திய சமையல்காரர்களை அழைக்கிறது சிங்கப்பூர்! குறைந்தபட்சம் 1.2 லட்சம் சம்பளம்!

சம்பளம் 

இது தற்காலிக வேலை என்றும், நிரந்தர பணி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சமபலம் ரூபாய் 18,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிக்க கடைசி நாள் 

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10/08/2023 முதல் 24/08/2023 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துமனையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பு கூறுகின்றது. 

விண்ணப்பிக்கும் முறை 

இந்த பணிக்கான விண்ணப்பப் படிவம் thanjavur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படவேண்டும். அதை விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும். 24/08/2023க்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பம் செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

IBPS Recruitment 2023 : மாதம் 1.50 லட்சம் வரை சம்பளம்.. வங்கி வேலையில் சேர வாய்ப்பு - முழு விபரம் இதோ !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Jobs: அரசு சட்டப்பணிக்கு நேரடி வாய்ப்பு! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!