தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் நெல் கொள்முதல் பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் நெல் கொள்முதல் பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்
காலி பணியிடங்கள்: 3
பணியின் விவரம்:
பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் (Record Clerk, Security, Assistant) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு ஆண்/ பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் இந்த மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் web.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்பு அதனை நன்கு படித்து பூர்த்தி செய்து, உங்களுடைய தகுதி சான்றிதழ் அனைத்தையும் இணைக்க வேண்டும்,
ஏதேனும் கூடுதல் அனுபவ சான்றிதழ் இருந்தாலும் சிறந்தது.
பின்னர் உங்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்
மேலும் படிக்க:சூப்பர் செய்தி!! மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்.. நாளை முதலமைச்சர் தொடங்கி வைப்பு..
அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்
9F St, தாமஸ் ரோடு
மகாராஜா நகர்
பாளையங்கோட்டை 627011.
வயது:
விண்ணப்பத்தாரகள் வயது 18 யிலிருந்து 37 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எட்டாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள், ஏதேனும் பட்டப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Record Clerk, Security, Assistant ஆகிய பணிகளுக்கு சம்பளம் ரூ. 3,499 தொடங்கி ரூ. 3285 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் படிக்க:தேர்வர்கள் கவனத்திற்கு!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. முக்கிய அறிவிப்பு