டிகிரி முடித்திருந்தால் போதும், சுப்ரீம் கோர்ட்டில் சூப்பர் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

Published : Mar 08, 2025, 09:36 AM IST
டிகிரி முடித்திருந்தால் போதும், சுப்ரீம் கோர்ட்டில் சூப்பர் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

சுருக்கம்

உச்ச நீதிமன்றத்தில் 241 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டதாரிகள் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறமையுடன் விண்ணப்பிக்கலாம்.

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 241 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அசிஸ்டண்ட் (Group 'B' Non-Gazetted) பணிக்கு 241 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இதேபோல ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறமையும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 30 வயதுக்கு மேல் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும். சட்ட விதிகளின்படி, வயது வரம்பு தளர்வும் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள், எஸ்.சி / எஸ்.டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வுகள் கிடைக்கும்.

சம்பளம்:

நீதிமன்ற ஜூனியர் உதவியாளர் பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.74,000 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு நடைமுறை:

முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும். பிறகு தட்டச்சுத் தேர், கணினி திறன் தேர்வு ஆகியவையும் நடத்தப்படும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், வேலூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேர்வு நடக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://www.sci.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250 செலுத்தினால் போதும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்று (மார்ச் 8, 2025) கடைசி நாள். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்பு பற்றி விரிவான தகவல்களை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.

Supreme Court Junior Court Assistant Recruitment 2025 Notification

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!