மாணவர்கள் படித்து முடித்தால் உடனே பட்டம் பெறலாம் என்று யுஜிசி குழு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியதை அடுத்து, அதன் அம்சங்களை நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அதில், ஒரு பட்டப்படிப்பில் சேர்ந்த ஒரு மாணவர் ஓராண்டில் அந்த படிப்பின் சான்றிதழை பெற்று வெளியேறலாம். அதுபோலவே, இரண்டு ஆண்டுகளில் டிப்ளமோ படிப்புடனும், 3 ஆண்டில் பட்டப் படிப்புடன் வெளியேறலாம் (multiple entry and exit in higher education) போன்ற பல்வேறு அம்சங்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
மேலும் அதனை மதிப்பாய்வு செய்வதற்கும், புதிய பட்டங்கள் பெயரிடல்களை பரிந்துரைக்கவும், நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்களுக்கு, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது. அதன் படி, தற்போது மாணவர்கள் தங்கள் 3 அல்லது 4 ஆண்டுகள் என்று முழுவதுமாக தங்களின் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. மேலும் அவர்கள் படித்து முடித்ததும் கிரெடிட் மதிப்பெண்களைப் பெற்றால் உடனடியாக சான்றிதழ், டிப்ளமோ, டிகிரி பட்டத்தை வழங்கலாம் என்று யுஜிசி குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
undefined
இதையும் படிங்க: ரயிலை தவறவிட்டாலோ, டிக்கெட்டை ரத்து செய்தாலோ, முழு பணத்தை திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா?
இதனை அடுத்து, பல்வேறு உயர் கல்விகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க, அகாடமி ஆஃப் கிரெடிட் என்ற பெயரில் வங்கி உருவாக்கப்படும். மேலும் மாணவர்கள் பல்வேறு செமஸ்டர்களில் பெறும் மதிப்பெண்கள், அதன் கல்வி ஆண்டின் இறுதியில் சேர்க்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் உள்ளது. அதுபோலவே, போதிய கிரெடிட் மதிப்பெண்களைப் பெற்றால் உடனடியாக சான்றிதழ், டிப்ளமோ, டிகிரி பட்டத்தை பெற மாணவர்கள் தகுதியானவர்கள் என்று யுஜிசி குழு பரிந்துரை செய்துள்ளது.