ரயில்வேயில் சூப்பர் வேலை: எப்படி விண்ணப்பிப்பது?

Published : Jun 09, 2023, 03:52 PM IST
ரயில்வேயில் சூப்பர் வேலை: எப்படி விண்ணப்பிப்பது?

சுருக்கம்

ரயில்வே ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (Junior Technical Associate - JTA) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway - SCR) வெளியிட்டுள்ளது. இந்தப் பதவியில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30, 2023க்குள் தங்கள் விண்ணப்பங்களை ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் SCR அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

** விண்ணப்பக்க கடைசி தேதி - ஜூன் 30, 2023


விண்ணப்பக் கட்டணம்


SC/ST/OBC/பெண்கள்/சிறுபான்மையினர்/ EWS – ரூ.250/-
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

கல்வி தகுதி


பொறியியல் படிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், ஐடி, கம்யூனிகேசன் என்ஜினீயரிங், கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பொறியியல் அல்லது அதனை சார்ந்த படிப்புகளை முடித்திருக்க வேண்டும் அல்லது மேற்கூறிய துறைகளில் டிப்ளமோ படிப்புகளை படித்திருக்க வேண்டும். எம்எஸ்சி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி பிரிவில் 3 ஆண்டு சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு


பொது - 18-33 வயது
ஓபிசி - 18-36 வயது
SC/ST - 18-38 வயது

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி மதிப்பெண், நேர்க்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, 
தகுதி - 55 மதிப்பெண்கள்
அனுபவம் - 30 மதிப்பெண்கள்
ஆளுமை/புத்திசாலித்தனம்- 15 மதிப்பெண்கள்

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தை '‘Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), office of Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin -500025’ என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

UPSC Exam: இ-சம்மன் லெட்டர் என்றால் என்ன? நேர்காணலுக்கு ஏன் முக்கியம்?
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!