பிளஸ் 2 படித்திருந்தால் போதும் போதும்; மத்திய அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

By SG Balan  |  First Published May 22, 2023, 5:41 PM IST

அரசு நிறுவனங்களில் பணிபுரிவதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


எஸ்எஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஜூன் மாதம் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அமைச்ச அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட் அரசு நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர் (Lower Division Clerk), இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant), டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) போன்ற பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

Tap to resize

Latest Videos

டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பில் கணிதம் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கீழ்நிலை எழுத்தாளர் மற்றும் இளநிலை செயலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதும்.. இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு !!

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 01-08-2023 அன்று 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும். வெவ்வேறு பிரிவினருக்கு அரசு  இடஒதுக்கீட்டு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் உள்ளன. பட்டியல் சமூகத்தினருக்கு இந்தத் தேர்வை எழுத 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு தளர்வு கொடுக்கபடுகிறது.

வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் மேலும் விவரம் அறியை அதிகாரபூர்வ  அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

ssc.nic.in என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம்தான் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும்போது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். பதிவேற்றும் பாஸ்போட் புகைப்படத்தில் தொப்பி, கண்ணாடி போன்றவற்றை அணிந்திருக்கக் கூடாது. முகம் தெளிவாகத் தெரியும் வகையில் இருப்பது அவசியம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08.06.2023.

TN Arts College Admission: மாணவர்களே முந்துங்கள்.. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்..!

click me!